கேப்டன் விராட் கோலி தலைமையில் இந்திய அணி பெற்ற 10வது இன்னிங்சிஸ் வெற்றி இதுவாகும். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிக இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கேப்டனாக இருந்தார். அந்த சாதனையை விராட் கோலி தற்போது முறியடித்துள்ளார். அன்னிய மண்ணில் அதிக டெஸ்ட் போட்டிகளை வென்றது, டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை பெற்று தந்த கேப்டன் என்ற தோனியின் சாதனையையும் கோலி முறியடித்துள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய வீரராக இருந்த மயங்க் அகர்வால் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 28 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் என மயங்க் அகர்வால் 243 ரன்கள் குவித்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வேகப்பந்து வீச்சாளர் முஹமது ஷமி இந்தூர் டெஸ்ட் போட்டியில் மொத்தம் 7 விக்கெட்களை வீழ்த்தினார்.