ஐபிஎல் – இந்தியன் ப்ரீமியர் லீக் : இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு தொடரில் ஐபிஎல் முதலிடத்தை பிடித்துள்ளது. தொடக்க நிகழ்ச்சியை 22.9 கோடிப்பேர் தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர்.
2/ 10
உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடர் : கத்தார் நாட்டில் வெகு சிறப்பாக கால்பந்தாட்ட தொடர் நடந்து முடிந்துள்ளது. கூகுளில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு தொடரில் இது 2ஆம் இடத்தை பிடிததுள்ளது.
3/ 10
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆசிய அளவில் நடத்தப்பட்ட ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடர்கள். ஆண்கள் பிரிவில் இலங்கையும், பெண்கள் பிரிவில் இந்தியாவும் சாம்பியன் பட்டம் பெற்றன.
4/ 10
ஐசிசி டி20 உலகக்கோப்பை : 8ஆவது ஐசிசி டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் 16ம்தேதி தொடங்கி நவம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெற்றது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வென்று இங்கிலாந்து கோப்பையை கைப்பற்றியது.
5/ 10
காமல்வெல்த் போட்டிகள் : இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் ஜூலை 28 – ஆகஸ்ட் 8-ல் நடைபெற்றது. 178 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தை பிடித்தது. இந்தியாவுக்கு 61 பதக்கங்கள் கிடைத்தன.
6/ 10
ஐ.எஸ்.எல். – இந்தியன் சூப்பர் லீக் : இந்தியாவில் கால்பந்தாட்ட அணிகளுக்கு இடையே நடைபெற்ற தொடர். கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு தொடர்களில் 6 ஆம் இடத்தை பிடித்துள்ளது.
7/ 10
ப்ரோ கபடி லீக் : 2014ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. 8 ஆவது சீசன் அக்டோபரில் தொடங்கி டிசம்பர் 17ஆம் தேதி வரை நடந்தது.
8/ 10
ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் : நியூசிலாந்தில் மார்ச் மற்றும் ஏப்ரலில் நடந்தது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது.
9/ 10
ஆஸ்திரேலிய ஓபன் : ஜனவரி 17 ல் தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. ஒற்றையர் ஆண்கள் பிரிவில் ரபேல் நடாலும், பெண்கள் பிரிவில் ஆஷ்லெக் பார்ட்டியும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
10/ 10
விம்பிள்டன் : கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் தொடர், கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு தொடரில் 10ஆவது இடத்தை பிடித்துள்ளது.