ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 விதமான தொடர்களில் விளையாடி வருகிறது. (BCCI)
2/ 10
அண்மையில், நடந்து முடிந்த 4 போட்டிகள் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. (Cricket Australia)
3/ 10
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 71 ஆண்டுகால தாகத்தை தீர்த்தது. (Image: AP)
4/ 10
இரு அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (ஜன.12) தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. (BCCI)
5/ 10
சிட்னிக்கு வந்த சேர்ந்த மறுநாளே பல மாதங்களாக ஓய்வில் இருந்த மகேந்திர சிங் தோனி, ஷிகர் தவான் உள்ளிட்ட வலைப்பயிற்சி மேற்கொண்டனர். (BCCI)
6/ 10
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி தொடங்க இருப்பதால், அனைத்து வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர். (BCCI)
7/ 10
தொடர்ந்து 2-வது நாளாக தோனி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். (BCCI)
8/ 10
பல மாதங்களாக ஓய்வில் இருந்த அம்பதி ராயுடு, சிட்னி மைதானத்தில் வலைப்பயிற்சி செய்தார். (BCCI)
9/ 10
கடைசி டெஸ்டில் இந்தியா வெற்றி பெற உதவிய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டார். (BCCI)
10/ 10
இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அவருடன், ஜடேஜா, கே.எல்.ராகுல், தோனி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். (BCCI)