முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » அச்ரேக்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை சுமந்து சென்ற சச்சின் டெண்டுல்கர்!

அச்ரேக்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை சுமந்து சென்ற சச்சின் டெண்டுல்கர்!

அச்ரேக்கரின் உடல் தகனம் செய்யப்படும் வரை  சச்சின் டெண்டுல்கர் எங்கும் செல்லாமல் அருகிலேயே இருந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

 • 18

  அச்ரேக்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை சுமந்து சென்ற சச்சின் டெண்டுல்கர்!

  1932-ம் ஆண்டு பிறந்த ஸ்ரீ ராமகாந்த் அச்ரேக்கர், மும்பையில் நடந்த பல்வேறு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற பலர் இவரிடம் பயிற்சி பெற்றுள்ளனர். சச்சின் டெண்டுல்கரை உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக மாற்றியதில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளது. (Twitter)

  MORE
  GALLERIES

 • 28

  அச்ரேக்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை சுமந்து சென்ற சச்சின் டெண்டுல்கர்!

  சச்சின் தவிர வினோத் காம்ப்ளி, அஜித் அகார்கர் உள்ளிட்ட பலரை சிறந்த வீரர்களாக ராமகாந்த் உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று சச்சின் டெண்டுல்கர், ராமகாந்த் அச்ரேக்கரை நேரில் சென்று பார்த்து மரியாதை செலுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். (Getty Images)

  MORE
  GALLERIES

 • 38

  அச்ரேக்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை சுமந்து சென்ற சச்சின் டெண்டுல்கர்!

  மும்பையில் வசித்து வந்த ஸ்ரீ ராமகாந்த் அச்ரேக்கர் வயது மூப்பின் காரணமாக நேற்று காலமானார். அவரது உடலுக்கு சச்சின் டெண்டுல்கர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். (Twitter)

  MORE
  GALLERIES

 • 48

  அச்ரேக்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை சுமந்து சென்ற சச்சின் டெண்டுல்கர்!

  சச்சின் டெண்டுகல்கர் தவிர, வினோத் காம்ப்ளி மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் அச்ரேக்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று (ஜன.3) அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. (Twitter)

  MORE
  GALLERIES

 • 58

  அச்ரேக்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை சுமந்து சென்ற சச்சின் டெண்டுல்கர்!

  சிறந்த கிரிக்கெட் வீரராக தன்னை உருவாக்கிய பயிற்சியாளருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அச்ரேக்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை சுமந்து சச்சின் டெண்டுல்கர் சென்றார் . (Twitter)

  MORE
  GALLERIES

 • 68

  அச்ரேக்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை சுமந்து சென்ற சச்சின் டெண்டுல்கர்!

  தன்னுடைய தந்தையின் ஸ்தானத்தில் வைத்திருந்த அச்ரேக்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை சுமந்து சென்ற வாகனத்தில் சச்சின் டெண்டுல்கரும் சென்றார். (Twitter)

  MORE
  GALLERIES

 • 78

  அச்ரேக்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை சுமந்து சென்ற சச்சின் டெண்டுல்கர்!

  அச்ரேக்கரின் உடலை இறுதி ஊர்வலமாக கொண்டு சென்றபோது வாகனத்தின் இருபுறங்களில் இளம் கிரிக்கெட் வீரர்கள் மரியாதை செலுத்தும் வகையில் பேட்டை உயர்த்திப் பிடித்தனர். (Twitter)

  MORE
  GALLERIES

 • 88

  அச்ரேக்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை சுமந்து சென்ற சச்சின் டெண்டுல்கர்!

  அச்ரேக்கரின் உடல் தகனம் செய்யப்படும் வரை  சச்சின் டெண்டுல்கர் எங்கும் செல்லாமல் அருகிலேயே இருந்தார். (Twitter)

  MORE
  GALLERIES