டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறவிருந்த நிலையில், கொரோனா காரணமாக துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. அக்டோபர் 17ம் தேதி போட்டி தொடங்கவுள்ள நிலையில், தொடரில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.
2/ 10
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு விராத் கோலி தலைமை தாங்கவுள்ளார்.
3/ 10
ரோகித் சர்மா (துணைத் தலைவர்) கே.எல். ராகுல், சூர்ய குமார் யாதவ் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
4/ 10
இதேபோல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கும் அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
5/ 10
ஆல் ரவுண்டரான ரவிந்தர ஜடேஜா, ராகுல் சாஹார், அக்சார் பட்டேல், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் டி20 அணியில் இடம் பிடித்துள்ளனர்.
6/ 10
ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோருக்கு அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
7/ 10
தமிழகத்தை சேர்ந்த ரவிசந்திரன் அஸ்வின் 4 ஆண்டுகளுக்கு பின்னர் டி20 அணியில் இடம் பிடித்துள்ளார். கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் மேற்கு இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் அவர் விளையாடி இருந்தார்.
8/ 10
மாற்று வீரர்களாக ஷ்ரேயாஸ் ஐயர், சர்துல் தாகூர், தீபக் சஹார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
9/ 10
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்றது.
10/ 10
தமிழக வீரர் நடராஜன், ஷிகர் தவான் ஆகியோர் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.