31 பந்துகளில் மிட்செல் மார்ஷ் எடுத்த அரைசதம் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தனிப்பட்ட வீரர் எடுக்கும் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதே பைனலில் நியுசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 32 பந்துகளில் அரைசதம் கண்டதை முறியடித்தார் மிட்செல் மார்ஷ். இதற்கு முன்பாக குமார் சங்கக்காரா 2014-ல் 33 பந்துகளிலும் 2016-ல் ஜோ ரூட் 33 பந்துகளிலும் அரைசதம் கண்டதே பைனலில் அதிவேக அரைசத சாதனையாக இருந்தது.
85 ரன்களை 48 பந்துகளில் விளாசிய கேன் வில்லியம்சன் அதில் 10 பவுண்டரி 3 சிக்சர்களை விளாசினார். மிட்செல் ஸ்டார்க் பவுலிங்கை பொளந்து கட்டி விட்டார், இறுதி உலகக்கோப்பை டி20 போட்டியில் இது இணைந்த அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராகும். முன்னதாக 2016 டி20 உலகக்கோப்பை இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மர்லன் சாமுவெல்ஸ் 85 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.