தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் தென்னாப்ரிக்கா வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதிய 2-வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்றது. (ICC)
2/ 8
டாஸ் வென்ற தென்னாப்ரிக்க அணி முதலில் பாகிஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தது. தென்னாப்ரிக்காவின்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 177 ரன்களில் சுருண்டது. (ICC)
3/ 8
தென்னாப்ரிக்க அணி, முதல் இன்னிங்சில் டு பிளெசிஸ் (103), மார்க்ராம் (78), பவுமா (75), டி காக் (59) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 431 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. (ICC)
4/ 8
254 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஷான் மசூத் (61), ஆசாத் ஷஃபீக் (88), பாபர் அஸாம் (72) ஆகியோர் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தனர். (ICC)
5/ 8
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற பாகிஸ்தான் அணி 294 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. (ICC)
6/ 8
இதனை அடுத்து, வெறும் 41 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென்னாப்ரிக்க அணி களமிறங்கியது. (ICC)
7/ 8
9.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்து அந்த அணி வெற்றி பெற்றது. அத்துடன், 2-0 என தொடரையும் கைப்பற்றி அசத்தியது. (ICC)
8/ 8
தென்னாப்ரிக்க அணியின் கேப்டன் டு பிளெசிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். (Cricket South Africa)