Home » photogallery » sports » CRICKET SARFRAZ AHMED SLAMS SHOAIB AKHTAR TERMS FORMER SPEEDSTERS CRITICISM ON RACIST REMARK AS PERSONAL ATTACK MU
என் மீது தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபடுகிறார்: அக்தருக்கு சர்ஃப்ராஸ் கண்டனம்!
Racism Issue: Sarfraz Ahmed slams #ShoaibAkhtar | பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அஹமதுக்கு 4 போட்டிகளில் விளையாட தடை விதித்து ஐசிசி அதிரடி நடவடிக்கை எடுத்தது. #SAvPAK
தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 விதமான தொடர்களில் விளையாடி வருகிறது. (CricketSouthAfrica)
2/ 7
2-வது ஒரு நாள் போட்டியில், தென்னாப்ரிக்க வீரர் பெலுக்வாயோவை பார்த்து நிறவெறியைத் தூண்டும்விதமாக பாகிஸ்தான் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்ஃபராஸ் அஹமது பேசி சர்ச்சையில் சிக்கினார். இந்த சம்பவத்தால் சர்வதேச அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. (CricketSA)
3/ 7
பின்னர், பெலுக்வாயோவை நேரில் சந்தித்த சர்ஃபராஸ், நடந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்டார். அதனை ஏற்றுக்கொண்ட பெலுக்வாயோ, அவரை மன்னித்துவிட்டதாக கூறினார். (Twitter)
4/ 7
இந்நிலையில், பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அஹமதுக்கு 4 போட்டிகளில் விளையாட தடை விதித்து ஐசிசி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. (ICC)
5/ 7
இதனால், தென்னாப்ரிக்காவுக்கு எதிரான கடைசி 2 ஒரு நாள் மற்றும் 2 டி-20 போட்டிகளில் சோயப் மாலிக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். (ICC)
6/ 7
இதற்கிடையே, சர்ஃபராஸ் அகமது பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கூறியிருந்தார். இதுகுறித்து ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு பின்னர் அவர் பதிவை நீக்கிவிட்டார். (Twitter)
7/ 7
இந்நிலையில், கராச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சோயப் அக்தர் பேசுகையில், “அக்தர் விமர்சிக்கவில்லை, தனிப்பட்ட முறையில் என்னை தாக்குகிறார். நான் என்னுடைய தவற ஒப்புக்கொள்கிறேன். அதற்கான தண்டனையும் ஏற்றுக்கொண்டேன்’ என்று கூறினார்.