முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » சச்சின் - சேவாக் சாதனையை முறியடித்த ரோகித் - தவான்!

சச்சின் - சேவாக் சாதனையை முறியடித்த ரோகித் - தவான்!

Rohit - Dhawan Beat Sachin - Sehwag Record | இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர்களான சச்சின் டெண்டுல்கர் - வீரேந்திர சேவாக் ஜோடியின் சாதனையை, ஷிகர் தவான் - ரோகித் சர்மா ஜோடி முறியடித்துள்ளது. #NZvIND #ShikarDhawan

 • News18
 • 17

  சச்சின் - சேவாக் சாதனையை முறியடித்த ரோகித் - தவான்!

  நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதல் ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. (BCCI)

  MORE
  GALLERIES

 • 27

  சச்சின் - சேவாக் சாதனையை முறியடித்த ரோகித் - தவான்!

  இதனை அடுத்து, இரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி மவுண்ட் மான்கனூயி நகரில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 324 ரன்கள் குவித்தது. (BlackCaps)

  MORE
  GALLERIES

 • 37

  சச்சின் - சேவாக் சாதனையை முறியடித்த ரோகித் - தவான்!

  இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் ஒரு நாள் போட்டியில் தனது 27-வது அரை சதத்தையும், ரோகித் சர்மா, ஒரு நாள் போட்டியில் தனது 38-வது அரை சதத்தையும் பதிவு செய்தனர். (BlackCaps)

  MORE
  GALLERIES

 • 47

  சச்சின் - சேவாக் சாதனையை முறியடித்த ரோகித் - தவான்!

  ஷிகர் தவான் - ரோகித் சர்மா ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்தது. நிதானமாக விளையாடிய ஷிகர் தவான் 66 ரன்கள் எடுத்தும், ரோகித் சர்மா 87 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். (BCCI)

  MORE
  GALLERIES

 • 57

  சச்சின் - சேவாக் சாதனையை முறியடித்த ரோகித் - தவான்!

  இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர்களான சச்சின் டெண்டுல்கர் - வீரேந்திர சேவாக் ஜோடியின் சாதனையை, ஷிகர் தவான் - ரோகித் சர்மா ஜோடி முறியடித்துள்ளது. சச்சின் - சேவாக் ஜோடி, 114 இன்னிங்சில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய 13 முறை சதம் எடுத்துள்ளது. (GettyImages)

  MORE
  GALLERIES

 • 67

  சச்சின் - சேவாக் சாதனையை முறியடித்த ரோகித் - தவான்!

  இந்தச் சாதனையை 95-வது இன்னிங்சிலேயே ஷிகர் தவான் - ரோகித் சர்மா ஜோடி செய்துள்ளது. (PTI)

  MORE
  GALLERIES

 • 77

  சச்சின் - சேவாக் சாதனையை முறியடித்த ரோகித் - தவான்!

  இந்த வரிசையில், சவுரவ் கங்குலி - சச்சின் டெண்டுல்கர் ஜோடி 26 முறை சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளது. (GettyImages)

  MORE
  GALLERIES