டெல்லியில் காற்று மாசு பிரச்னை தீவிரமாக உள்ள நிலையில் அங்கு இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. நேற்று பயிற்சியில் ஈடுபட்ட வீரர்கள், முகத்தில் மாஸ்க் அணிந்தே இருந்தனர். எனினும், முதல் டி20 போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார்.