இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா, வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில், 92 பந்துகளுக்கு 104 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.
2/ 6
ஒரே உலகக் கோப்பை தொடரில் 4 சதங்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
3/ 6
2003-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் சவுரவ் கங்குலி 3 சதங்களை விளாசியதே, இந்தியரின் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது ரோஹித் சர்மா முறியடித்துள்ளார்.
4/ 6
ஒரே உலகக் கோப்பை தொடரில் 4 சதங்களை விளாசிய இலங்கை வீரர் குமார சங்ககாராவின் சாதனையை சமன் செய்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில், தொடர்ந்து 4 சதங்களை சங்ககாரா விளாசினார்.
5/ 6
தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 122 ரன்களைக் குவித்த ரோஹித் சர்மா, பாகிஸ்தான் அணிக்கு எதிராக 140 ரன்களையும், இங்கிலாந்து அணிக்கு எதிராக 102 ரன்களையும் விளாசினார்.
6/ 6
544 ரன்களைப் பெற்றுள்ள ரோஹித் சர்மா, இந்தத் தொடரில், அதிக ரன்களைக் குவித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.