இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த (ஜன.28) மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3-0 என ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது. இதன்மூலம், 10 ஆண்டுகளுக்குப்பின், நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி ஒரு நாள் தொடரை வென்று மீண்டும் சாதித்தது. (BCCI)