கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திப்பதாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலா கூறியுள்ளார். கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவர் முழுமையாக குணம் அடைவதற்கு இன்னும் 6 மாதங்கள் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பந்த் விரைந்து குணம் அடைய பிரார்த்திப்பதாக பிரபல நடிகை ஊர்வசி ரவுத்தலா கூறியுள்ளார். இந்தியாவின் பெருமைக்குரிய விளையாட்டு வீரர் என்று ரிஷப் பந்த்தை அவர் பாராட்டியுள்ளார். இந்தியாவின் சொத்தாக இருக்கும் ரிஷப் பந்த் மீண்டும் மைதானம் திரும்ப விரும்புவதாகவும் ஊர்வசி ரவுத்தலா கூறியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பாக ஊர்வசி ரவுத்தலா மற்றும் ரிஷப் பந்த்தை இணைத்து செய்திகள் பரவின. இருவரும் காதலித்து வருவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இந்திய திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் ஊர்வசி ரவுத்தலா, தமிழில் சரவணன் நடித்த தி லெஜெண்ட் படத்தில் இடம்பெற்றுள்ளார். ஊர்வசி ரவுத்தலா ஊர்வசி ரவுத்தலா ஊர்வசி ரவுத்தலா