இந்தப் போட்டியில் 54வது ஓவரை வீசிய அஸ்வின் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி புதிய சாதனையைப் படைத்தார். அஸ்வின் இந்த சாதனையை எட்ட 89 டெஸ்ட் போட்டிகளை எடுத்துக் கொண்டுள்ளார். அதேவேளையில், அனில் கும்ப்ளே தனது 93வது டெஸ்டில் 450வது டெஸ்ட் விக்கெட்டை எடுத்தார்.