சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறுவதாக அளித்த அறிவிப்பை அடுத்து, பலரும் தங்களின் நினைவுகளையும், தோனி மீதான தங்களின் நன்மதிப்பினையும் பகிர்ந்து வருகிறார்கள். பத்மாவத் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கறிந்த ரன்வீர் சிங், தோனியுடனான தனது நினைவுகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 2007/08 கர்ஜத் பகுதியின் என்.டி ஸ்டூடியோவில் இந்த படத்தை எடுத்துக்கொண்டதாக பதிவிட்டிருக்கிறார்.