கிரிக்கெட் ஜாம்பாவன் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் மீது ஆர்வம் காட்டி வருகிறார். 23 வயதான அர்ஜூன் டெண்டுல்கர் இடது கை பேட்ஸ்மேன் மற்றும் பவுலரான அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வந்தார். அர்ஜுன் மும்பை ரஞ்சி அணியில் இருந்தாலும், அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
தற்போது நடப்பு உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ரஞ்சி தொடரில் கோவா அணிக்காக அர்ஜூன் அறிமுகமானார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அர்ஜூன் சதம் விளாசி அசத்தினார். ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த அர்ஜூன் 207 பந்துகளில் 120 ரன்கள் எடுத்தார். இதில் 16 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும்