ஆரம்பம் முதலே அதிரடியாக பவுலிங் செய்த மொகமத் சிராஜ் கான்வே, ராம் லதாம், மிட்சல் சாண்ட்னர், சிப்லி ஆகியோரது விக்கெட்டுகளை எடுத்து அதிரடி காட்டினார். இதனால் இந்திய அணி வெற்றி பெற இவர் முக்கிய காரணமாகவே அமைந்தார். 10 ஓவர்கள் வீசிய சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்து 46 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார்.
அந்த கடின இலக்கை சேஸ் செய்தாலும், ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி 131 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனால் அடுத்த சில ஓவர்களில் இந்திய அணி வெற்றிபெற்று விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 7 ஆவது விக்கெட்டிற்கு அந்த அணியின் மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் ஜோடி சேர்ந்து, இந்திய பவுலிங் சிதறடித்தனர். குறிப்பாக பிரேஸ்வெல் இந்த ஆட்டத்தை டி20 மேட்சைப்போல விளையாடி, இந்திய ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்தார்.