பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடியின் மகள் அன்ஷாவை பந்தவீச்சாளர் ஷாகின் அப்ரிடி திருமணம் முடித்துள்ளார். ஷாகின் அப்ரிதியின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. பாகிஸ்தான் அணிக்காக 398 ஒருநாள் 99 டி20 போட்டிகளில் அப்ரிதி விளையாடியுள்ளார். ஆல்ரவுண்டரான இவர் கிரிக்கெட் ரசிகர்களால் பரவலாக அறியப்படுகிறார். அப்ரிதியின் 2ஆவது மகள் அன்ஷாவுக்கும், பாகிஸ்தான் அணியின் பவுலர் ஷாகின் அப்ரிதிக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக தகவல்கள் பரவின. இருவரின் திருமணத்திற்கு அப்ரிதி சம்மதம் தெரிவித்த நிலையில் இந்த திருமணம் நேற்று நடைபெற்றது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் இந்த திருமணத்தில் பங்கேற்றனர். 22 வயதாகும் ஷாகின் அப்ரிதி பாகிஸ்தான் அணியில் 18 வயதில் இணைந்தார்.   மணமக்கள் ஷாகின் மற்றும் அன்ஷாவுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.