

கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஸ்டார் நிறுவனத்தின் வசம் இருந்த இந்திய அணியின் ஸ்பான்ஸர் பொறுப்பை சீன நிறுவனமான ஒப்போ கைப்பற்றியது.


ரூ.1079 கோடி ரூபாய் ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் 2022-ம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், ஒப்போ நிறுவனம் திடீரென ஸ்பான்ஸர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளது.


ஒப்போ நிறுவனம் எதற்காக விலகியுள்ளது என்ற காரணம் தெரியவில்லை. எனினும், வர உள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர் வரை ஒப்போ பெயர் கொண்ட ஜெர்சியை இந்திய வீரர்கள் அணிந்திருப்பார்கள்.


ஒப்போவுக்கு அடுத்தபடியாக கல்வி சார்ந்த தகவல்களை வழங்கும் பைஜு என்ற செயலி ஸ்பான்ஸர் பொறுப்பை வசப்படுத்தியுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கு அடுத்து வர உள்ள போட்டிகளில் இந்திய அணியின் ஜெர்சிகளில் பைஜு நிறுவனத்தின் பெயர் இருக்கும். 2022-ம் ஆண்டு வரை இந்த ஒப்பந்தம் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது


சீன நிறுவனமான ஒப்போ, எலக்ட்ரானிக் சாதன உற்பத்தில் இந்தியாவில் தனித்த சந்தையை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.