நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 2 விதமான தொடர்களில் விளையாடி வருகிறது. (BCCI)
2/ 13
நேற்று முன் தினம் (பிப்.3) முடிந்த ஒரு நாள் தொடரை 4-1 என இந்திய அணி கைப்பற்றியது. இதன்மூலம், 10 ஆண்டுகளுக்குப்பின், நியூசிலாந்து மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று இந்தியா சாதித்தது. (BCCI)
3/ 13
இதனையடுத்து, இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நாளை (பிப்.6) முதல் வரும் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. (BCCI)
4/ 13
இதனையொட்டி, வெல்லிங்டன் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். (BCCI)
5/ 13
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அம்பதி ராயுடு, முகமது ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தங்களது பணியை சரியாகச் செய்துள்ளனர். (BCCI)
6/ 13
ஏற்கனவே, ரிஷப் பண்ட், க்ருனல் பாண்டியா மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் 15 பேர் கொண்ட டி-20 அணியில் உள்ளனர்.(AFP)
7/ 13
உத்தேசமான இந்திய டி-20 அணியைப் பொறுத்தவரை, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கும். (PTI)
8/ 13
3-வது வீரராக களமிறங்கிய ஷுப்மன் கில், ஒரு நாள் போட்டியில் கொடுத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தவில்லை. இருந்தாலும் அவருக்கு இன்னொரு முறை கொடுக்க வாய்ப்புள்ளது. (BCCI)
9/ 13
ஆல் ரவுண்டர் வரிசையில் கேதர் ஜாதவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா, க்ருனல் பாண்டியாவை ஒரே அணியில் விளையாட வாய்ப்புள்ளது.
10/ 13
சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகிய இருவரும் களமிறங்குவார்கள். (AFP)
11/ 13
வேகப்பந்து வீச்சில் ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் புவனேஸ்வர் குமார் மற்றும் கலீல் அகமது களமிறங்குவார்கள். சித்தார்த் கவுல் தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டியதிருக்கும். (BCCI)
12/ 13
மீதமுள்ள 4-வது, 5-வது இடங்கள் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானவை. 4-வது இடத்தில் தோனி கண்டிப்பாக களமிறங்குவார். (ICC)
13/ 13
மிடில் ஆர்டர் பேட்டிங்கில் வலுசேர்க்க தினேஷ் கார்த்திக்கை விட அதிரடி காட்டக் கூடியவர் ரிஷப் பண்ட். அதனால், 5-வது இடத்தில் ரிஷப் பண்ட் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. (BCCI)