மிதாலி ராஜ் 1999ம் ஆண்டு ஜூன் மாதம் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதன்முதலாக களமிறங்கினார். தற்போது மிதாலி ராஜ் 20 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி சச்சினுக்கு இணையான மைல்கல்லை எட்டி உள்ளார். மகளிர் கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளுக்கு மேல் விளையாடும் முதல் வீராங்கனை என்ற பெருமையை மிதாலி ராஜ் பெற்றுள்ளார்.
ஜாம்பவான் சச்சின் 22 ஆண்டுகளுக்கு மேலாக(22 ஆண்டுகள் 91 நாட்கள்) கிரிக்கெட் விளையாடி முதல் இடத்தில் உள்ளார். ஜெயசூர்யா (21 ஆண்டுகள் 184 நாட்கள்), ஜாவேத் மியான்தத் (20 ஆண்டுகள் 272 நாட்கள்) கிரிக்கெட் ஆடி அடுத்த இடங்களில் உள்ளனர். ஆடவர் கிரிக்கெட் உடன் சேர்த்து பார்த்தால் மிதாலி ராஜ் 4வது இடத்தில் உள்ளார்.