வெஸ்ட் இண்டீசில் கடந்த நவம்பர் மாதம் நடந்த மகளிர் டி-20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் முன்னணி வீராங்கனை மிதாலி ராஜ் எந்தவித காரணமும் இன்றி சேர்க்கப்படவில்லை. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், மிதாலி ராஜ் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ உயரதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளித்தனர். (Getty)
மிதாலி ராஜ் சேர்க்கப்படாதது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், “இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது வெளிநாட்டு மண்ணில் எங்களுக்கு இந்த 3 போட்டிகள் மட்டுமே உள்ளது. அதன்பிறகு நாங்கள் அதிகம் இந்திய சூழ்நிலையிலேயே விளையாட உள்ளோம். அதனால்தான், இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு அளித்தோம்” என தெரிவித்தார். (BCCI)