நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. (Twitter/BCCIWomen)
2/ 9
முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 3 ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. (Twitter/BCCIWomen)
3/ 9
இந்நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (பிப்.1) நடைபெற்றது. (Twitter/WhiteFerns)
4/ 9
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 44 ஓவா்களில் 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக தீப்தி சர்மா 52 ரன்கள் சோ்த்தாா். (ICC)
5/ 9
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 29.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியதால், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (ICC)
6/ 9
இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ், நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் களமிறங்கியதன்மூலம், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 200 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்தார். (ICC)
7/ 9
இந்திய அணி மொத்தம் 263 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் மிதாலி ராஜ் 200 போட்டிகளில் விளையாடி உள்ளாா். மிதாலி ராஜ் 7 சதங்கள், 51 அரை சதங்களை அடித்துள்ளாா். (ICC)
8/ 9
200 ஒரு நாள் போட்டி தொடங்குவதற்கு முன்பு, இந்திய அணி சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. (BCCI)
9/ 9
மிதாலி ராஜுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளன. (BCCI)