நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலிருந்து காயம் காரணமாக இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான மாற்று வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.
2/ 6
நியூசிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் பேட்டிங்கின் போது ரோஹித் சர்மாவிற்கு தசைபிடிப்பு ஏற்பட்டது. தசைபிடிப்பு காரணமாக வலி அதிகமாக இருந்ததால் அவர் போட்டியில் பாதியிலேயே விலகினார்.
3/ 6
இந்நிலையில் தசைபிடிப்பு குணமடைய ஒரிரு வாரங்களாகும் என்பதால் ரோஹித் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரிலிருந்து விலகி உள்ளார்.
4/ 6
ரோஹித் சர்மாவிற்கு பதிலாக நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மயங்க் அகர்வாலும், டெஸ்ட் தொடரில் இளம் தொடக்க வீரரான ப்ரதிவ் ஷா அறிவிக்கப்பட்டுள்ளனர்.
5/ 6
நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுலுடன் ப்ரிதிவ் ஷா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
6/ 6
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகார் தவான், ரோஹித் சர்மா ஆகியோர் காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் விலகி உள்ளதால் ப்ரிதிவ் ஷாவிற்கு இந்த வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பாரக்கப்படுகிறது.