இலங்கையின் பேட்டிங் ஜாம்பவானான சனத் ஜெயசூர்யாதான் ஆசிய கோப்பைத் தொடரின் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன். அவர் 25 ஆசிய கோப்பைப் போட்டிகளில் 1,220 ரன்கள் அடித்துள்ளார். அவருடைய பேட்டிங்க் ஆவரேஜ் 53.04 ஆக உள்ளது. அவர் இதுவரை ஆசியக் கோப்பைத் தொடரில் 6 சதங்கள் மற்றும் மூன்று அரை சதங்களை அடித்துள்ளார். ஆசிய கோப்பையில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 130.
ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரரில் இரண்டாவது இடத்தில் குமார் சங்ககாரா உள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர் 24 ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடி 1,075 ரன்கள் அடித்துள்ளார்.அவருடைய பேட்டிங் ஆவரேஜ் 48.86 ஆக உள்ளது. அவர் 4 சதங்கள் மற்றும் 8 அரைச் சதங்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக 121 ரன்கள் அடித்துள்ளார்.