கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் தனது நீண்டநாள் காதலியான அதியா ஷெட்டியை இன்று திருமணம் முடித்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. இந்த திருமணம் அதியா ஷெட்டியின் தந்தையும் நடிகருமான சுனில் ஷெட்டியின் மகாராஷ்டிர மாநிலம் கண்டாலா பண்ணை வீட்டில் நடைபெற்றது. திருமண நிகழ்வில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். புகைப்படங்கள் எடுக்க திருமண நிகழ்வில் தடை விதிக்கப்பட்டிருப்பதால் மணமக்கள் மற்றும் சுனில் ஷெட்டியின் புகைப்படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. விரைவில் அதியா மற்றும் கே.எல். ராகுல் தங்கள் திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். திருமணம் முடித்துள்ள ராகுல் – அதியாவுக்கு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். சினிமா மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களின் திருமணம் என்பதால் இந்த நிகழ்வு இந்தியா முழுவதும் பேசப்பட்டுள்ளது.   மகளின் திருமணத்தின்போது மகன் அஹானுடன் சுனில் ஷெட்டி. இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த தர்பார் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.