ஹோம் » போடோகல்லெரி » விளையாட்டு » கிரிக்கெட் உலகில் இந்தச் சாதனையை படைத்தவர் இவர் மட்டுமே...!

கிரிக்கெட் உலகில் இந்தச் சாதனையை படைத்தவர் இவர் மட்டுமே...!

Irfan Pathan announces retirement from all forms of cricket |

 • News18
 • 19

  கிரிக்கெட் உலகில் இந்தச் சாதனையை படைத்தவர் இவர் மட்டுமே...!

  இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக விளங்கிய இர்பான் பதான், அனைத்து வித சர்வதேச போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளர்.

  MORE
  GALLERIES

 • 29

  கிரிக்கெட் உலகில் இந்தச் சாதனையை படைத்தவர் இவர் மட்டுமே...!

  இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டரான கபில்தேவுக்குப் பின் ராபின் சிங், ஜடேஜா போன் ஆல்-ரவுண்டர்கள் வந்தாலும் பந்துவீச்சில் அச்சுறுத்தக் கூடியவர்களாக இல்லை. இந்நிலையில் 2003ம் ஆண்டில் 19 வயதில் இளம்புயலாய் புகுந்தார் இடக்கை வேகப் பந்துவீச்சாளர் இர்பான் பதான்.

  MORE
  GALLERIES

 • 39

  கிரிக்கெட் உலகில் இந்தச் சாதனையை படைத்தவர் இவர் மட்டுமே...!

  அந்த தொடரில் தன் ஸ்விங் பந்துவீச்சால் ஸ்டீவ் வாவ், கில்கிறிஸ்ட் போன்ற ஜாம்பவான்களை சாய்த்த இந்த இளம் புயல், உலகுக்கு தன் வரவை ஓங்கி அறிவித்தார்.

  MORE
  GALLERIES

 • 49

  கிரிக்கெட் உலகில் இந்தச் சாதனையை படைத்தவர் இவர் மட்டுமே...!

  டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹர்பஜனைப் போல் ஹாட்ரிக் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை 2006ல் பாகிஸ்தானில் நடந்த தொடரில் பெற்றார். கிரிக்கெட் உலகில் போட்டியின் முதல் ஓவரில் ஹாட்ரிக் எடுத்த ஒரே வீரர் பதான்.

  MORE
  GALLERIES

 • 59

  கிரிக்கெட் உலகில் இந்தச் சாதனையை படைத்தவர் இவர் மட்டுமே...!

  மேலும் 2007-ல் நடந்த முதல் இருபது ஓவர் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் சிறப்பாக பந்துவீசி "மேன் ஆப் தி மேட்ச்" ஆகவும் ஆனார் பதான்.

  MORE
  GALLERIES

 • 69

  கிரிக்கெட் உலகில் இந்தச் சாதனையை படைத்தவர் இவர் மட்டுமே...!

  வேகப்பந்துவீச்சாளர்களின் சொர்க்கமான பெர்த்தில் 2008ல் அசத்தலாக பந்துவீசி ஆஸ்திரேலிய மண்ணில் அரிய டெஸ்ட் வெற்றியை இந்தியாவுக்கு ஈட்டித்தந்தார். சிக்சர், பவுண்டரிகளை அனாயசமாக விளாசி பேட்டிங்கிலும் பரிமளித்தவர்.

  MORE
  GALLERIES

 • 79

  கிரிக்கெட் உலகில் இந்தச் சாதனையை படைத்தவர் இவர் மட்டுமே...!

  இந்திய அணிக்காக 29 டெஸ்ட், 120 ஒருநாள் மற்றும் 24 டி20 போட்டிகளில் விளையாடி 301 சர்வதேச விக்கெட்டுகளை சாய்த்த பதான், 2012-க்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. தொடர் காயங்கள் காரணமாக 28 வயதில் இருந்து இந்திய அணியில் இடம்பெற முடியாமல் போயிற்று.

  MORE
  GALLERIES

 • 89

  கிரிக்கெட் உலகில் இந்தச் சாதனையை படைத்தவர் இவர் மட்டுமே...!

  எனினும் ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக பேட்டிங், பவுலிங்கில் ஜொலித்தார் இர்பான் பதான். கடைசியாக 2017-ம் ஆண்டு ஐபிஎல்-க்கு பிறகு விளையாடாமல் இருந்த இர்பான் பதானை நடப்பு ஆண்டில் எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. இந்நிலையில் தன் ஓய்வை பதான் அறிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 99

  கிரிக்கெட் உலகில் இந்தச் சாதனையை படைத்தவர் இவர் மட்டுமே...!

  சொந்த அணியான பரோடா அணிக்காக ரஞ்சிபோட்டிகளில் ஆடிய பதான், தற்போது ஜம்மு-காஷ்மீர் அணி பயிற்சியாளராக உள்ளார். அப்பணியைத் தொடரப்போவதாகவும் கூறியுள்ளார். பதானை ரிவர்ஸ் ஸ்விங் பவுலிங்கும், அதிரடி பேட்டிங்கும் ரசிகர்கள் மனதில் பசுமையாய் நிலைத்திருக்கும். 

  MORE
  GALLERIES