பிட்ச் பசுந்தரையாக அமைய புவனேஷ்வர் குமாருக்கு பிரமாதமாக அமைந்தது. ஆண்டி பால்பர்னி என்ற அயர்லாந்து கேப்டனுக்கு ஒரு பந்தை வெளியே எடுத்து பிறகு உள்ளே கொண்டு வந்த போது கிளீன் பவுல்டு ஆகி டக் அவுட் ஆனார். 3ம் நிலையில் இறங்கிய காரெத் டெலானிக்கு ஒரு பெரிய இன்ஸ்விங்கரை வீசி பயமுறுத்தினார். புவனேஷ்வர் 2 ரன்களையே கொடுத்திருந்தார்.