ஐபிஎல் மினி ஏலம் நாளை கொச்சியில் நடைபெறுகிறது. இதில், மொத்தம் 405 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ஆரம்ப கட்டத்தில் பட்டியலில் 991 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்திருந்தனர். இறுதிப் பட்டியல் 405 வீரர்களாக குறைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டுள்ளது. 10 அணிகளில் மொத்தம் 87 இடங்கள் உள்ளன. 405 வீரர்களில் 273 இந்திய வீரர்கள், 132 வெளிநாட்டு வீரர்களும் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். மொத்தமாக ரூ.206.5 கோடி செலவு செய்யப்படவுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ்: கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டிய கேப்டனாக செயல்பட்டு முதல் தொடரிலே கோப்பையை வென்றது. இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.75.75 கோடியை செலவு செய்து 18 வீரர்களை தக்க வைத்து கொண்டுள்ளது. மேலும் மீதமுள்ள ரூ.19.25 கோடியில் 3 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 7 வீரர்களை இந்த ஏலத்தில் எடுக்கவுள்ளது.