#IPL2019: நான்கு முக்கியமான சாதனைகளைப் படைக்க இருக்கும் சுரேஷ் ரெய்னா!
2019 ஐ.பி.எல் தொடரின் நடப்பு சீசனிலேயே நான்கு முக்கிய சாதனைகளைப் படைக்க காத்திருக்கிறார் சின்ன தல சுரேஷ் ரெய்னா.
News18 Tamil | March 17, 2019, 7:55 PM IST
1/ 7
2019 ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியிலேயே நான்கு முக்கிய சாதனைகளைப் படைக்க காத்திருக்கிறார் சின்ன தல சுரேஷ் ரெய்னா. (AFP)
2/ 7
கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் தொடக்கப் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. (IPL)
3/ 7
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தல தோனிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்கள் விரும்பக் கூடியவர் சின்ன தல என செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா. தற்போது, இந்திய கிரிக்கெட் அணியில் நிலையான இடத்தைப் பிடிக்க முடியாமல் தவிர்த்து வந்தாலும், சென்னை அணியில் இவருக்கு தனி இடம் உள்ளது. (Twitter)
4/ 7
சுரேஷ் ரெய்னா, நடப்பு சீசனில் பல்வேறு சாதனைகளை படைக்க காத்திருக்கிறார். அவர் இன்னும் 15 ரன்கள் அடித்தால் ஐ.பி.எல் தொடரில் 5,000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைப்பார். அத்துடன் 15 சிக்சர்கள் அடித்தால் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். (BCCI)
5/ 7
இன்னும் 5 கேட்ச்கள் பிடித்தால் 100 கேட்ச் பிடித்த வீரர் என்ற சாதனையும் ரெய்னா படைக்க உள்ளார். (Twitter)
6/ 7
மேலும், அதிக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் கவுதம் கம்பீர், டேவிட் வார்னர் ஆகியோர் தலா 36 அரைசதங்களுடன் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர். 35 அரைசதங்களுடன் ரெய்னா 2-வது இடத்தில் இருக்கிறார். (BCCI)
7/ 7
வீரர்கள் ஏலத்தில் கம்பீரை யாரும் வாங்கவில்லை. அதேபோல், காயத்தால் அவதிப்பட்டு வரும் வார்னர் நடப்பு சீசனில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. அதனால், இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைக்க ரெய்னாவுக்கு அதிக வாய்ப்புள்ளது. (BCCI)