இதுவரை நடந்து முடிந்த 11 ஐ.பி.எல் சீசன்களின் முடிவில் அசாத்திய சாதனை படைத்தவர்கள் சிலரைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
News18 Tamil | March 23, 2019, 12:45 PM IST
1/ 9
இதுவரை நடந்து முடிந்த 11 ஐ.பி.எல் சீசன்களின் முடிவில் அசாத்திய சாதனை படைத்தவர்கள் சிலரைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
2/ 9
2019 ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் வரும் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. தொடக்க போட்டியில் தோனி தலைமையிலான நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உடன் பலப்பரீட்சை நடத்துகின்றன. (IPL)
3/ 9
ஐ.பி.எல் தொடரின் 12-வது சீசன் தொடங்க உள்ள நிலையில், அசாத்திய சாதனை படைத்தவர்கள் சிலரைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். (IPL)
4/ 9
அதிக ரன்கள் அடித்தவர்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா, இந்த வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் 172 இன்னிங்சில் விளையாடி 4,985 ரன்களை விளாசியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக விராட் கோலி 155 இன்னிங்சில் விளையாடி 4,948 ரன்கள் எடுத்துள்ளார். (AFP)
5/ 9
அதிக விக்கெட் எடுத்தவர்: இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி பந்துவீச்சாளருமான லசித் மலிங்கா 154 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அமித் மிஸ்ரா (146), பியூஸ் சாவ்லா (140) ஆகியோர் 2-வது மற்றும் 3-வது இடங்களில் உள்ளனர்.
6/ 9
அதிக சதம் அடித்தவர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைச் சேர்ந்த கிறிஸ் கெய்ல் 6 சதங்கள் விளாசி முதல் இடத்தில் இருக்கிறார். கோலி மற்றும் வாட்சன் ஆகியோர் தலா 4 சதங்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். (BCCI)
7/ 9
அதிக அரைசதம் அடித்தவர்: இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் 36 அரைசங்கள் அடித்துள்ளார். ஆனால், இந்த முறை அவர் ஏலத்தில் விலைபோகததால் 12-வது சீசனில் பங்கேற்க மாட்டார். சன்ரைசர்ஸ் அணியின் வார்னர் (36), ரெய்னா (35) ஆகியோர் முதலிரண்டு இடங்களில் உள்ளனர். (PTI)
8/ 9
வெற்றி மற்றும் தோல்விகள்: ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 171 போட்டிகளில் விளையாடி 97 வெற்றிகளை பெற்றுள்ளது. சிறப்பான வெற்றி விகிதத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 61.56% பெற்றுள்ளது. (BCCI)
9/ 9
சிறந்த கேப்டன்ஷி: ஐ.பி.எல் தொடரில் மூன்று கேப்டன்கள் 50-க்கும் மேற்பட்ட வெற்றிகளை குவித்துள்ளனர். ஆனால், வரும் சீசனில் 2 கேப்டன்களே போட்டி போடுவார்கள். முதல் இடத்தில் தோனியும் (94 வெற்றிகள்), 2-வது இடத்தில் ரோகித் சர்மாவும் (51 வெற்றிகள்) உள்ளனர். கம்பீர் 71 வெற்றிகள் பெற்றிருந்தாலும் வரும் சீசனில் அவர் பங்கேற்கவில்லை. (CSK)