கடைசி போட்டியில் படுதோல்வி... ஆனாலும் கோப்பை நமக்குதான்...!
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததாலும், ஒரு நாள் தொடருக்கான கோப்பையை வென்றது. #NZWvINDW
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. (Twitter/BCCIWomen)
2/ 6
முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 3 ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. (Twitter/BCCIWomen)
3/ 6
இந்நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (பிப்.1) நடைபெற்றது. (Twitter/WhiteFerns)
4/ 6
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 44 ஓவா்களில் 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக தீப்தி சர்மா 52 ரன்கள் சோ்த்தாா். (ICC)
5/ 6
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 29.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியதால், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (ICC)
6/ 6
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இருப்பினும், முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதால் 2-1 என இந்திய அணி தொடரை வென்றது. (Twitter/WhiteFerns)