நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் 3 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் நான்காவது ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கிறது. (Image: BCCI)
2/ 6
இளம் வீரர் ஷுப்மன் கில் அறிமுக வீரராக களமிறங்கினார். அவருக்கு மூத்த வீரர் தோனி தொப்பியை அணி அளித்து பாராட்டினார். (Image: BCCI)
3/ 6
தோல்வியிலிருந்து மீண்டெழுவதற்காக நியூசிலாந்து பவுலர்கள் ஆக்ரோசமாக பந்து வீசினர். நியூசிலாந்து பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். (Image: BCCI)
4/ 6
தோனி இன்று களமிறங்காத நிலையில், தினேஷ் கார்த்திக் அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டார். ரோகித் சர்மா, தவான், கில், ராயுடு, தினேஷ், கேதர் ஜாதவ், பாண்டியா என அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆகினர். (Image: BCCI)
5/ 6
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் போல்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கிராண்ட்கோம் 3 விக்கெட்டுகளை எடுத்தார். (Image: BCCI)
6/ 6
22 ஓவர்களில் இந்திய அணி 55 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கோலி தலைமையில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, ரோகித் தலைமையில் படுமோசமாக விளையாடுவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. (Image: BCCI)