கோலி இன்னிங்சை ஒன்றுமில்லாமல் செய்த ஷர்துல் தாக்கூர் அதிரடி
ஓவல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் கலக்கி விட்டார் ஷர்துல் தாக்கூர். 31 பந்துகளில் அரைசதம் கண்டு வெளுத்து வாங்கினார், இவரது அரைசதம் கபில்தேவை நினைவூட்ட கோலியின் அரைசத இன்னிங்ஸ் பின்னுக்குத் தள்ளப்பட்டது. கடைசியில் இங்கிலாந்தும் சரிவு கண்டது, பும்ரா 2 விக்கெட், உமேஷ் யாதவ் 1 விக்கெட்.