இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது சிறப்பான ஆல்ரவுண்ட் ஆட்டத்தால், சவுத்தாம்ப்டனில் வியாழக்கிழமை நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற உதவினார். 31 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த பாண்டியாவின் ஆட்டத்தால் இந்தியா 20 ஓவர்களில் 198 ரன்கள் குவித்தது. பின்னர் ஜேசன் ராய், டேவிட் மலான், லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் சாம் கர்ரன் ஆகியோரின் 4 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹர்திக் பாண்டியா.
2009ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக் மொஹாலியில் யுவராஜ் சிங் 25 பந்துகளில் 60 ரன்கள் என்று 240 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளாசி பிறகு பந்து வீச்சில் குமார் சங்கக்காரா, சிந்தக ஜெய்சிங்க, மற்றும் கபுகேதரா ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போது ஒரே போட்டியில் அரைசதம் 4 விக்கெட்டுகள் என்று யுவராஜின் 3 விக்கெட்டுகள் என்பதை சற்றே விஞ்சி நிற்கிறார் ஹர்திக் பாண்டியா.