சமீபத்தில் மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸூக்கு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினார்கள். ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை வர்ணனை செய்த டீன் ஜோன்ஸ் கடந்த செப்டம்பர் 24-ம் தேதி மாரடைப்பு காரணமாக மும்பையில் உயிரிழந்தார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் மற்றும் ஜோன்ஸின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இதில் கலந்து கொண்டனர். மெல்போர்னில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் டீன் ஜோன்ஸ்க்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.