அதனால் தான், டிசம்பர் 26-ம் தேதியை ‘பாக்சிங் டே’ என்று அழைக்கிறார்கள். இதற்கு வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. கூலி தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்துக்காக தங்களது குடும்பத்தினரை பார்க்க செல்லும்போது, அவர்களது முதலாளிகள் கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்களை ‘பாக்ஸ்’ போல் பரிசாக வழங்குவார்களாம். இதுவும், ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படுதற்கு காரணமாம்.