டாப்-ஆர்டர் பேட்டர்களின் ஆரம்ப சரிவில் இருந்து மற்றொரு வெற்றியுடன் ஒருநாள் தொடரை இந்தியா முழுமையாக ஸ்வீப் செய்தது. ரிஷப் பந்த் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இந்தியாவை 3 விக்கெட்டுக்கு 42 ரன்களில் இருந்து உயர்த்தினர், வாஷிங்டன் சுந்தர் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் பின்வரிசையில் ரன்களை வழங்கினர், பின்னர் மீண்டும் பிரசித் கிருஷ்ணா, சிராஜ் உள்ளிட்ட பவுலரக்ள் மேற்கிந்தியத் தீவுகளை 169 ரன்களுக்கு முடக்கினர். இந்தத் தொடரில் மே.இ.தீவுகள் ஒருமுறை கூட 200 ரன்களை எட்டவில்லை.