இந்தக் குழிப்பிட்சில் எப்படி ஆடுவது என்று தெரிந்த இந்திய அணியில் ஒரு ரிஷப் பண்ட், ஒரு ஷ்ரேயஸ் அய்யர் குறைந்தபட்சம் இருக்கிறார்கள் அதனால் இந்திய அணி 252 ரன்களை ஓவருக்கு 4.25 என்ற ரன் விகிதத்தில் அதிரடியாகக் குவித்தது. இலங்கை இந்த இடத்தில்தான் சோடை போனது, 100 ரன்களை இந்தியாவுக்கு அதிகம் கொடுத்தது, ரங்கனா ஹெராத் போன்றோர் இருந்திருந்தால் இந்தியா 125 ஆல் அவுட், முரளிதரன் இந்த இந்திய அணிக்கு எதிராக வீசியிருந்தால் இந்திய ஸ்கோரை நினைத்துப் பார்க்க முடியவில்லை.
விராட் கோலி பரிதாபம்! அவர் 23 ரன்களில் நன்றாகத்தான் ஆடினார், ஆனால் ஸ்பின்னர் டி சில்வா வீசிய பந்து ஒன்ரு அரைக்குழியில் விழுந்து அப்படியே உருண்டு விராட் கோலியின் பூட்சை கிச்சு கிச்சு மூட்டி விட்டு கால்காப்பைத் தாக்கியது, எல்.பி. ஆகி வெளியேறினார்.காலுக்கு அடியில் பாம்போ, தேளோ என்று நினைத்த விராட் கோலி ஒரு நிமிடம் அதிர்ந்து வாயடைத்து போய் திரும்பினார். நல்ல பிட்ச்டா என்று மனதுக்குள் திட்டித் தீர்த்திருப்பார்.
முதலில் மயங்க் அகர்வால் (4), அதுவே எல்.பி. அவுட், ஆனால் நடுவ்ர் கொடுக்கவில்லை. ஆனால் அது நோ-பால் ஆனதால் டீஆர் எஸ் கிடையாது. டிக்வெல்லா டீஆர் எஸ்-க்க்கு சிக்னல் செய்கிறார், இவ்வளவு குழப்பத்துக்கு மத்தியில் அகர்வால் ரன் அவுட் ஆனார் என்றால் அவரை மேதை என்றுதான் அழைக்க வேண்டும். அகர்வால் ஓடி வர ரோகித் சர்மா எதிர்முனையில் கல்லாய்ச் சமைந்தார். அகர்வால் ரன் அவுட், மிகவும் மோசமான ரன் அவுட், ஸ்கூள் பிள்ளைகள் கிரிக்கெட் போல் இருந்தது.
ஒரு கட்டத்துக்கு மேல் இறங்கி வந்து அடிக்க ஆரம்பித்த ஷ்ரேயஸ் அய்யர் தனஞ்ஜயா டி சில்வாவை இருமுறை சிக்ஸ் விளாசினார், இதில் ஒன்று மிட்விக்கெட் மேல் கிரவுண்டை விட்டு வெளியே சென்றது. இதன் மூலம் 54 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார் அய்யர். மீண்டும் பவுண்டரிகள், 2 ஸ்ட்ரெய்ட் சிக்சர்கள் என்று ஒரு ஸ்டீவ் ஸ்மித்தாக டெய்ல் எண்டரை வைத்துக் கொண்டு 47 ரன்களை சேர்த்தார். கடைசியில் 98 பந்துகளில் 10 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 92 ரன்கள் எடுத்து ஜெயவிக்ரமாவிடம் ஸ்டம்ப்டு ஆனார். இந்தியா 59.1 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்
ரோஹித் சர்மா ஒரு பவுண்டரி 1 சிக்சர் உடன் 15 ரன்கள் எடுத்து 10 ஓவர்களுக்குள்ளாகவே எம்புல்டேனியா பெரிய அளவில் பந்தை ஸ்பின் செய்து எழுப்ப எட்ஜ் ஆகி கேட்ச் ஆனார். ஹனுமா விஹாரி (31), விராட் கோலி (23) இணைந்து ஸ்கோரை 29/2-லிருந்து 76 வரை கொண்டு சென்றனர். 31 ரன்களுக்கு விஹாரி நல்ல டெக்னிக்குடன் தான் ஆடி வந்தார், ஆனால் இடது கை ஸ்பின்னர் ஜெயவிக்ரமா ஒரு பந்தை திருப்ப எட்ஜ் ஆகி வெளியேறினார்.
ரிஷப் பண்ட் இறங்கினார் அவர் தன் பாணியில் எனக்கு ஸ்பின்னா? குழிப்பிட்சாவது ஒண்ணாவது என்று இறங்கி இறங்கி வந்து வெளுத்துக் கட்டினார், 7 பவுண்டரிகளுடன் 26 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அவரது பாணியிலிருந்து சற்றே ,மாறி பின்னால் சென்று ஆட முயன்றார் ஆனால் எம்புல்டேனியா பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது. ஜடேஜா, அஸ்வின், அக்சர் படேல் என்று வரிசையாக இந்திய தர மதிப்பீட்டில் ஆல்ரவுண்டர்கள் வரிசையாக வெளியேற, ஷ்ரேயஸ் அய்யர் தன் வேலையைக் காட்டினார்.
தனஞ்ஜயா டி சில்வாவை இருமுறை சிக்ஸ் விளாசினார், இதில் ஒன்று மிட்விக்கெட் மேல் கிரவுண்டை விட்டு வெளியே சென்றது. இதன் மூலம் 54 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார் அய்யர். மீண்டும் பவுண்டரிகள், 2 ஸ்ட்ரெய்ட் சிக்சர்கள் என்று ஒரு ஸ்டீவ் ஸ்மித்தாக டெய்ல் எண்டரை வைத்துக் கொண்டு 47 ரன்களை சேர்த்தார். கடைசியில் 98 பந்துகளில் 10 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 92 ரன்கள் எடுத்து ஜெயவிக்ரமாவிடம் ஸ்டம்ப்டு ஆனார். இந்தியா 59.1 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் எம்புல்டேனியா, ஜெயவிக்ரமா தலா 3 விக்கெட்டுகள்.
இலங்கை பேட்டிங்கை என்ன சொல்ல?
பும்ரா, ஷமி வீசிய சாதாரண பந்துகளுக்கு விக்கெட்டுகளை வாரி வழங்கி சென்றனர். குசல் மெண்டிஸ் முதலில் வெளியே சென்ற பந்தை விரட்டி பும்ராவுக்கு விக்கெட்டை கிஃப்ட் செய்தார். கருண ரத்னே தவறான லைனில் பந்தை ஆடி பவுல்டு ஆனார். அஞ்சேலோ மேத்யூஸ்தான் சொல்லிக் கொள்ளும் படியாக ஒரு இன்னிங்சை ஆடி 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 43 ரன்கள் எடுத்தார், ஆனால் இவரும் தேவையில்லாமல் பும்ராவுக்கு விக்கெட்டை பரிசாக அளித்தார். பும்ரா 3 விக்கெட், ஷமி 1 விக்கெட், குழிப்பிட்ச் தாதா அக்சர் படேல் 1 விக்கெட். இலங்கை 86/6. இலங்கை பேட்டிங்கைப் பத்தி என்னத்த சொல்ல.