ஹோம் » போடோகல்லெரி » விளையாட்டு » கேகிசோ ரபாடான்னா சும்மாவா?- தென் ஆப்பிரிக்கா நாளாக மாற்றினார்-இந்தியா 223 ஆல் அவுட்

கேகிசோ ரபாடான்னா சும்மாவா?- தென் ஆப்பிரிக்கா நாளாக மாற்றினார்-இந்தியா 223 ஆல் அவுட்

கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் வென்று வரலாறு படைக்கும் முனைப்புடன் இந்திய அணி ஆடியதாகத் தெரியவில்லை முதல் நாள் ஆட்டத்திலேயே ரபாடா, யான்சென் வேகத்துக்கும் ஆக்ரோஷத்துக்கும் 223 ரன்களில் சுருண்டது. ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா டீன் எல்கர் விக்கெட்டை பும்ராவின் அபாரமான பந்துக்கு இழந்து 17 ரன்கள் எடுத்துள்ளது.

 • 110

  கேகிசோ ரபாடான்னா சும்மாவா?- தென் ஆப்பிரிக்கா நாளாக மாற்றினார்-இந்தியா 223 ஆல் அவுட்

  விராட் கோலி ஏதோ தான் அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடியது போல் கட்டின பசுவாக ஆடினார், ஆனால் 99 டெஸ்ட்களில் ஆடிய ஒரு அனுவசாலி போல் நேற்றுதான் ஆடினார். ஆனால் சில ஆங்கில ஊடகங்கள் கூறுவது போல் ‘கிளாசி இன்னிங்ஸ்’ என்று அவரது பம்முதல்களையெல்லாம் கிரேட் டிபன்ஸ் என்று கொண்டாட ஒன்றுமில்லை.

  MORE
  GALLERIES

 • 210

  கேகிசோ ரபாடான்னா சும்மாவா?- தென் ஆப்பிரிக்கா நாளாக மாற்றினார்-இந்தியா 223 ஆல் அவுட்

  கோலியைவிடவும் நன்றாக ஆடினார் புஜாரா இவர் 7 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் யான்சென் ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து ஒரு கோணத்தில் பந்தை உள்ளே செலுத்தி வெளியே எடுக்க புஜாரா எட்ஜுக்கு அது போதுமானதாக இருந்தது.

  MORE
  GALLERIES

 • 310

  கேகிசோ ரபாடான்னா சும்மாவா?- தென் ஆப்பிரிக்கா நாளாக மாற்றினார்-இந்தியா 223 ஆல் அவுட்

  ரபாடா பிழையில்லாமல் துல்லியமாக வீசினார், எல்லா பந்துகளும் 140 கிமீ, எல்லா பந்துகளும் ஸ்டம்ப் அல்லது கவர்ச்சி ஆஃப் ஸ்டம்ப் வலைவீச்சு பந்துகளாக இருந்தன. ரகானே ஆட்டமிழந்த பந்தே ரபாடாவின் பந்து வீச்சு எப்படி என்பதற்கு எளிய சுயதேற்றமாக இருக்கிறது. அதுவும் கோலியை ஆட்டிப்படைத்து விட்டார் ரபாடா, ஒரே பீட்டன், ஆனால் கோலியும் சவாலுக்கு தன்னை இழக்காமல் நின்றார்.

  MORE
  GALLERIES

 • 410

  கேகிசோ ரபாடான்னா சும்மாவா?- தென் ஆப்பிரிக்கா நாளாக மாற்றினார்-இந்தியா 223 ஆல் அவுட்

  ரகானே ஆட்டமிழந்த பந்தே ரபாடாவின் பந்து வீச்சு எப்படி என்பதற்கு எளிய சுயதேற்றமாக இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 510

  கேகிசோ ரபாடான்னா சும்மாவா?- தென் ஆப்பிரிக்கா நாளாக மாற்றினார்-இந்தியா 223 ஆல் அவுட்

  கிரீசில் நின்று ஆட வேண்டும் என்றால் கட்டுக்கோப்பான உத்தி, பொறுமை, கால்நகர்த்தல் அவசியம், இதனை கோலி வெளிப்படுத்தினார். கோலி முதல் 100 பந்துகளில் சுமார் 60 பந்துகளை ஆடாமல் விட்டார். மொகீந்தர் அமர்நாத் நினைவு வந்தது. ஆனாலும் ஓவர் பிட்ச் ஆஃப் வாலிகளை அவர் கவர் டிரைவ், நேர் ட்ரைவ், ஆன் ட்ரைவ், பிளிக் என்று அசத்தினார், ஒரு முறை ரபாடா குத்தி எழுப்ப திரும்பி பைன் லெக்கில் சிக்ஸ் விளாசினார், மொத்தம் 12 பவுண்டரி 1 சிக்ஸ் என்று அருமையாக ஆடினார் கோலி.

  MORE
  GALLERIES

 • 610

  கேகிசோ ரபாடான்னா சும்மாவா?- தென் ஆப்பிரிக்கா நாளாக மாற்றினார்-இந்தியா 223 ஆல் அவுட்

  திராவிட் சொல்லிக் கொடுக்க கோலி ஆடியது போல் இருந்தது, முன் காலை நேராக முன்னால் கொண்டு வ்ந்தார், முன்பு எல்லா பந்துகளையும் ஆடும் முனைப்பில் முன் காலை குறுக்காகப் போடுவார், நேற்று அது இல்லை. இதை சுனில் கவாஸ்கர் வர்ணனையில் தெரிவித்தார்.

  MORE
  GALLERIES

 • 710

  கேகிசோ ரபாடான்னா சும்மாவா?- தென் ஆப்பிரிக்கா நாளாக மாற்றினார்-இந்தியா 223 ஆல் அவுட்

  விராட் கோலி 79 ரன்கள் எடுத்து மீண்டும் தன் பாதுகாப்பு ஆட்டத்தைத் துறந்து மீண்டும் அவுட் ஆஃப் பார்மில் இருந்த ஆட்டத்துக்குத் திரும்பி கால்களை குறுக்காக நகர்த்தி எல்லா பந்துகளையும் ஆடும் முயற்சியில் ரபாடாவின் அதியற்புத பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார். 201 பந்து 79 ரன்கள் கோலி. இந்திய அணி புதிய பந்து எடுக்கும் தேவையில்லாமல் 77.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு வெளியேறியது. தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா ஆட வந்த போது பும்ராவின் விளையாட முடியாத ஒரு பந்தை, ஆனால் ஆடியே ஆகவேண்டிய நிர்பந்திக்கும் ஒரு பந்தை டீன் எல்கர் தொட எட்ஜ் ஆகி புஜாராவிடம் கேட்ச் ஆனது. தென் ஆப்பிரிக்கா 17/1. ஆட்ட முடிவில் அய்டன் மார்க்ரம் 8 ரன்களுடனும் மகராஜ் 6 ரன்களூடனும் களத்தில் இருந்தனர்.

  MORE
  GALLERIES

 • 810

  கேகிசோ ரபாடான்னா சும்மாவா?- தென் ஆப்பிரிக்கா நாளாக மாற்றினார்-இந்தியா 223 ஆல் அவுட்

  ரிஷப் பண்ட் 50 பந்துகளில் 27 ரன்கள் என்று பங்களிப்பு செய்தார், இதில் 4 பவுண்டரிகள் அடங்கும் கடைசியில் யான்சென் பந்தை கட் செய்கிறேன் பேர்வழி என்று கல்லியில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

  MORE
  GALLERIES

 • 910

  கேகிசோ ரபாடான்னா சும்மாவா?- தென் ஆப்பிரிக்கா நாளாக மாற்றினார்-இந்தியா 223 ஆல் அவுட்

  ரவிச்சந்திரன் அஸ்வின் ஆடும் களமும் இதுவல்ல, பவுலிங்கும் இதுவல்ல முறையாக அவரை 2 ரன்களில் பேக் செய்து அனுப்பினார் யான்சென். ஷர்துல் தாக்கூர் இந்த முறையும் அப்பர் கட் சிக்ஸ் விளாசி ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்து தேவையில்லாமல் மகராஜுக்கு ஒரு விக்கெட்டை கொடுத்து வெளியேறினார்.

  MORE
  GALLERIES

 • 1010

  கேகிசோ ரபாடான்னா சும்மாவா?- தென் ஆப்பிரிக்கா நாளாக மாற்றினார்-இந்தியா 223 ஆல் அவுட்

  பும்ரா வாயை ஓவராகக் காட்டி வருவதால் அவருக்கு ரபாடா கையை உடைக்கும் ஒரு பந்தை வீசி வீழ்த்தினார் பும்ரா டக் அவுட். உமேஷ் யாதவ் 4 நாட் அவுட், ஷமி 7 ரன்கள் எடுத்து இங்கிடியிடம் அவுட் ஆனார்.

  MORE
  GALLERIES