மயங்க் அகர்வால், ராகுல் ஒரு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுப்பது போல் 36 ரன்களை எடுத்தனர். ஆனால் அகர்வால் மீண்டும் யான்சென் பந்து ஒன்று குறுக்காக அவரைக் கடந்து செல்ல தேவையில்லாமல் பேட்டை விட்டு எட்ஜ் ஆகி வெளியேறினார். டி காக்கிற்கு பதில் விக்கெட் கீப்பராக களமிறங்கிய கைல் வெரைன் அருமையானப் பிடித்தார்.
ஆலிவர் முதல் பந்தே புஜாராவுக்கு பவுன்சர் போட்டு பயமுறுத்தினார். முன் காலையும் நகர்த்தாமல் பின் காலிலும் சென்று ஆடாமல் நின்ற இடத்திலேயே நின்று ஆடும் கெட்டப்பழக்கம் உள்ளது புதிய பவுலர் ஆலிவருக்கும் தெரிந்து விட்டது போலும் ஒரு பந்தை குட் லெந்தில் குத்தி சற்றே எழுப்ப புஜாரா அறியாமலேயே பந்து மட்டையின் மேல் விளிம்பில் பட்டு பாயிண்டில் எளிதனா கேட்ச் ஆனது.
ஆலிவர் வேகம் பார்த்தால் மணிக்கு 130 கிமீ தான் வீசுகிறார், ஆனால் பவுன்ஸ் அவருக்கு நன்றாக ஆகிறது. அவரது உயரத்தினால் இந்திய பேட்டர்கள் சிறுமையாகி விட்டனர். ரபாடாவின் மிகப்பெரிய பந்து குட்லெந்திலிருந்து இன்ஸ்விங் ஆகி எழும்பும் பந்து இதில்தான் ஹனுமா விகாரி இன்சைடு எட்ஜில் காலியானார். ஷார்ட் லெக்கில் கேட்ச் ஆனது.
ஷர்துல் தாக்கூர் கேட்சிங் பிராக்டீஸ் கொடுத்து டக் அவுட் ஆனார். அஸ்வின் இறங்கினார், நின்று ஆடி பயனில்லை என்று அருமையான சில ஷாட்கள், ட்ரைவ்கள், பிளிக்குகள் ஆடி 46 ரன்களில் 6 பவுண்டரி அடித்து எதிர்முனையில் ஆளில்லாமல் போவதால் ஒரு ஸ்லாஷ் செய்து ஆட்டமிழந்தார், யான்சென் 4வது விக்கெட்டைக் கைப்பற்றினார்.