போட்டி முடிந்த பிறகு, தோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “மிகவும் கடினமான போட்டியாக இருந்தது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்று துறைகளிலும் சரியாக விளையாடவில்லை. 200 ரன்கள் என்ற இலக்கை சேஸிங் செய்வது எளிதான காரியம் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், சரியான தொடக்கம் அமையவில்லை” என தெரிவித்தார். (BCCI)