டாஸில் தொடர்ந்து 2ம் முறையாக வென்ற ரோகித் சர்மா சேசிங் தான் இந்தியாவுக்கு சரியான வழி, புள்ளி விவரங்களும் டி20-யில் இந்திய அணி தாதா என்பதற்கேற்ப ரோகித் சர்மா முதலில் நியூசிலாந்தை பேட் செய்ய அழைத்தார். ஆனால் மார்டின் கப்தில் (15 பந்துகளில் 31), ஆனால் புவனேஷ்வர் குமாரின் முதல் ஓவர் அற்புதம், நல்ல ஸ்விங் கப்டில் சரியாக ஆட முடியவில்லை. ஆனால் 3 பவுண்டரிகளை விளாசி கப்டில் 6 பந்துகளில் 14 என்று இருந்தார், அவருக்கு மிட் ஆனில் ராகுல் கேட்ச் ஒன்றையும் விட்டார்.
மீண்டும் அஸ்வின், ஒவ்வொரு பந்தையும் தன்னை ஒதுக்கிய கோலிக்கு சொல்லி காட்டுவது போல் அபாரத்துல்லியத்துடனும் சூட்சமமான மாற்றங்களுடனும் அற்புதமாக வீசினார். பந்தை ரிலீஸ் செய்யும் விதங்களை மாற்றிக்கொண்டே இருந்ததால் பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தாலும் அஸ்வின் பந்துகள் மட்டைக்கு அடிக்கும் விதமாக வாகாக வரவில்லை. 19 ரன்களுக்கு 1 விக்கெட் என்று அசத்தினார். செய்ஃபர்ட் ரிவர்ஸ் ஸ்கூப் ஆட முயன்று கேட்ச் ஆனார்.
அக்சர் படேல் ஒருபுறம் கட்டுப்படுத்த நியூசிலாந்து அணி முதல் 6 ஓவரில் 64/1 பிறகு அடுத்த 14 ஓவர்களில் 89 ரன்களையே எடுத்து 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர், மொத்தம் 153 ரன்கள்தான். 180 சென்றிருக்க வேண்டிய ஸ்கோர்.
ஹர்ஷல் படேல், அஸ்வின், அக்சர் படேல் சேர்ந்து 12 ஓவர்களில் 70 ரன்களையே கொடுத்தனர். தீபக் சாகர், புவனேஷ்வர் குமார் 8 ஓவர்களில் 81 ரன்களைக் கொடுத்தனர்.
பிறகு மில்னே வந்தார், போல்ட் வந்தார், ராகுல், ரோகித் இருவரும் சேர்ந்து 2 ஓவர்களில் 26 ரன்களை சேர்த்தனர். 117 ரன்களை எட்டியபோது ராகுல் 65 ரன்களில் சவுத்தியிடம் வீழ்ந்தார், ரோகித் சர்மா 36 பந்துகளில் 1 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 55 ரன்களில் சவுதீயிடம் வீழ்ந்தார். அதே ஓவரில் சூரியகுமார் யாதவும் சவுதீயிடம் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க 137/ 3 என்று ஆனது.