வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் யு-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அரையிறுதியில் நேற்று வலுவான பந்து வீச்சு கொண்ட ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிராக இந்திய இளம் கேப்டன் யாஷ் துல் சதம் (110) சதம் கண்டார். இவரும் ரஷீத்தும் (94) சேர்ந்து 204 ரன்கள் சேர்க்க இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தொடர்ச்சியாக 4வது முறை நுழைந்தது.
ஐசிசி உலகக்கோப்பைக்கு செல்லும் முன்னரே யாஷ் துல் பிரமாதமாக ஆடி வந்தார், டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்காக வினு மன்காட் டிராபியில் அவர் 5 ஆட்டங்களில் 302 ரன்களை 75 என்ற சராசரியில் விளாசினார். இந்த 2022ம் ஆண்டு ஐசிசி யு-19 உலகக்கோப்பையிலும் 5 போட்டிகளில் 3 அரைசதங்கள் ஒரு சதம் என்று பின்னி எடுத்து வருகிறார்.
யாஷ் துல்லின் குடும்பத்தினர் பல தியாகங்களைச் செய்து அவர் கிரிக்கெட்டில் வளர வேண்டும் என்று விரும்பினர். ஒருநாள் முழு நாட்டிற்கும் பெருமை சேர்ப்பார் என்று லட்சியத்துடன் வளர்த்தனர். இளம் யாஷின் தீப்பொறியைப் பார்த்த துலின் தாய்தான் அவரை அகாடமியில் சேர்த்தார். அவருக்கு 6 வயது இருக்கும் போது, அவரது தாயார் பால் பவன் கிரிக்கெட் அகாடமிக்கு அழைத்துச் சென்றார். அவரது ஆர்வத்தைத் தொடர அவரது முழு குடும்பமும் அவருக்கு ஆதரவாக இருந்தது, அவரது தாத்தா அவரை பயிற்சிக்கு அழைத்துச் சென்று அவர் முடிக்கும் வரை வெளியில் காத்திருந்தார். தந்தை பெஸ்ட் இங்கிலிஷ் மட்டைகளை அவருக்கு வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
கடந்த காலங்களில் டெல்லியின் U-16, U-19 மற்றும் இந்தியா ‘A’ U-19 அணிகளை அவர் வழிநடத்தியதால், துல் நல்ல அளவிலான கேப்டன்சி அனுபவத்தைக் கொண்டுள்ளார். மேலும், அவர் 2021 ACC U-19 ஆசிய கோப்பைக்கான அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார், பின்னர் அவருக்கு தற்போதைய உலகக் கோப்பைக்கான இந்திய U-19 அணியின் பொறுப்பு வழங்கப்பட்டது.