முதன் முறையாக 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி முதன் முறையாக மகேந்திர சிங் தோனி தலைமையில் களமிறங்கிறது. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் பலப்பரீச்சை நடத்தியது. இதில் 157 ரன்களை சேஸ் செய்துகொண்டிருந்த பாகிஸ்தான் அணி இறுதி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. அப்போழுது கடைசி ஓவரை வீசிய ஜோகிந்தர் சர்மா 2வது பந்தில் சிக்சரை கொடுத்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து தோனியின் அருமையாக கேப்டன்ஷிப்பால் ஸ்ரீசாந்திம் கேட்ச் கொடுத்து பாகிஸ்தான் வீரர் மிஸ்பா உல் ஹாக் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன் முறையாக டி20 உலககோப்பை தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.
2010 ஆம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்ற மூன்றாவது ஐசிசி டி20 உலககோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணி மோதியது. இதில் 148 ரன்களை 17 ஓவர்களில் சேஸ் செய்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்றில் முதன் முறையாக ஐசிசி தொடர் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது பால் காலிங்வுட் தலைமையிலான இங்கிலாந்து அணி
2012 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 4வது டி20 உலககோப்பை தொடரில் இலங்கை மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணி இறுதி போட்டியில் விளையாடியது. இதில் 138 ரன்களை சேஸ் செய்த இலங்கை அணியை 101 ரன்களில் மேற்கு இந்திய தீவுகள் அணி சுருட்டி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன் முறையாக ஜெஸ்சன் ஹோல்டர் தலைமையிலான மேற்கு இந்திய தீவுகள் அணி டி20 உலககோப்பை தொடரை கைப்பற்றியது
2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 6வது டி20 தொடரில் இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணி இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தியது. இதில் 156 இலக்கை துரத்தி சென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி இறுதி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் வீசிய முதல் 4 பந்துகளையும் சிக்சருக்கு பறக்க விட்டு பிரமிக்க வைத்தார். இதனால் மேற்கு இந்திய தீவுகள் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஜெஸ்சன் ஹோல்டன் தலைமையில் 2வது முறையாக டி20 உலககோப்பையை கைப்பற்றியது.
2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமீரகத்தில் நடைபெற்ற 7வது டி20 உலககோப்பை தொடரில் துபாயில் நடைபெற்ற இறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் 172 ரன்களை 18.5 ஓவர்களில் கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன் முறையாக ஆரோன் பின்ச் தலைமையில் டி20 உலககோப்பை தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது ஆஸ்திரேலியா.