ஐசிசி-யின் ஒரு நாள் தரவரிசையில் பேட்டிங்கில் இந்திய அணியின் கேப்டன் கோலியும், பந்துவீச்சில் பும்ராவும் முதலிடத்தில் உள்ளனர். ஐசிசி தரவரிசை பட்டியலில் விராட் கோலி 891 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் 5 சதங்கள் விளாசிய ரோஹித் சர்மா 885 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். உலகக் கோப்பை தொடர்ந்து சதங்கள் வீசி வரும் ரோஹித் சர்மா வரும் போட்டிகளில் அபாராமாக விளையாடினால் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிப்பார். ஐசிசி பேட்டிங் ஓரு நாள் தரவரிசைப் பட்டியல் ஐசிசி பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் யாக்கர் மன்னன் பும்ரா 814 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.   நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர் போலட், பும்ராவை விட 56 புள்ளிகள் பின்தங்கி 758 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 658 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளார். ஐசிசி பவுலிங் ஒரு நாள் தரவரிசைப் பட்டியல்