பின்னர் பேசிய சி.எஸ்.கே. அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், “நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூடு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அந்த நேரத்தில் குடும்பத்துடன் சிங்கப்பூரில் இருந்தேன். நியூசிலாந்து மக்கள் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை” எனத் தெரிவித்தார். மேலும், “சி.எஸ்.கே அணியில் கேதர் ஜாதவ் காயத்திற்குப் பின் அணியில் இணைந்துள்ளார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சி.எஸ்.கே இந்த சீசனில் சொந்த மைதானத்தில் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுகிறது. சுழற்பந்துவீச்சு நமது அணியின் பலமாக அமைந்துள்ளது. இந்த முறையும் கோப்பையைத் தக்கவைக்க முயற்சிப்போம்” என்று அவர் கூறினார். (CSK)