முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » செண்டை மேளம், சாரட் வண்டி... ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த நடராஜன் - புகைப்படங்கள்

செண்டை மேளம், சாரட் வண்டி... ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த நடராஜன் - புகைப்படங்கள்

நடராஜன் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் சின்னப்பம்பட்டி பிரிவு சாலையில் இருந்து சந்தைப்பேட்டை வரை அழைத்து செல்லப்பட்டார்.

 • 18

  செண்டை மேளம், சாரட் வண்டி... ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த நடராஜன் - புகைப்படங்கள்

  ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரில் முத்திரை பதித்த சொந்த ஊர் திரும்பிய தமிழக வீரர் நடராஜனுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  MORE
  GALLERIES

 • 28

  செண்டை மேளம், சாரட் வண்டி... ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த நடராஜன் - புகைப்படங்கள்

  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணிக்காக ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட் என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் நடராஜன் களமிறங்கி சாதித்தார்.

  MORE
  GALLERIES

 • 38

  செண்டை மேளம், சாரட் வண்டி... ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த நடராஜன் - புகைப்படங்கள்

  டி-20 மற்றும் டெஸ்ட் தொடர்களின் வெற்றிக்கோப்பையை இந்திய கேப்டன்கள் நடராஜனிடம் வழங்கி கவுரப்படுத்தினர். அந்த அளவிற்கு, இந்திய அணியின் வெற்றிக்கு அவரின் பங்களிப்பு முக்கியத்துவமாக வாய்ந்ததாக இருந்தது.

  MORE
  GALLERIES

 • 48

  செண்டை மேளம், சாரட் வண்டி... ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த நடராஜன் - புகைப்படங்கள்

  இந்நிலையில், தாயகம் திரும்பிய நடராஜன், மும்பையில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வந்தார். பின்னர், கார் மூலமாக சேலம் வந்தடைந்தார்.

  MORE
  GALLERIES

 • 58

  செண்டை மேளம், சாரட் வண்டி... ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த நடராஜன் - புகைப்படங்கள்

  அவரை வரவேற்பதற்காக சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏராளமான கிராம மக்கள் மற்றும் ரசிகர்கள் குவிந்தனர்.

  MORE
  GALLERIES

 • 68

  செண்டை மேளம், சாரட் வண்டி... ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த நடராஜன் - புகைப்படங்கள்

  நடராஜன் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் சின்னப்பம்பட்டி பிரிவு சாலையில் இருந்து சந்தைப்பேட்டை வரை அழைத்து செல்லப்பட்டார். செண்டை மேளம் முழங்க, வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்கள் நடராஜனை வரவேற்றனர்.

  MORE
  GALLERIES

 • 78

  செண்டை மேளம், சாரட் வண்டி... ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த நடராஜன் - புகைப்படங்கள்

  வாழ்த்து மழையில் நனைந்தவாறு வந்த அவர், ரசிகர்கள் மற்றும் கிராம மக்களின் அன்பில் திளைத்தார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடராஜனுக்கு வரவேற்பு அளிப்பதற்காக அவரது வீட்டின் முன்பு அமைக்கப்பட்ட மேடை அகற்றப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 88

  செண்டை மேளம், சாரட் வண்டி... ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த நடராஜன் - புகைப்படங்கள்

  அத்துடன், நடராஜன் வெளிநாடு சென்று திரும்பியிருப்பதால் 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறை அவருக்கு அறிவுறுத்தியுள்ளது.

  MORE
  GALLERIES