பிரபலங்களின் வாழ்கைத்துணை, பழக்க வழக்கங்கள், என்பதை தெரிந்து கொள்வதில் பலருக்கும் விருப்பம் இருக்கும். குறிப்பாக, இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் பற்றி தெரிந்து கொள்ள பெரிய கூட்டமே உள்ளது. எவ்வளவு புகழ் வருகிறதோ, அதே அளவுக்கு சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. ஒரு சிலரின் வாழ்க்கை மிகவும் ரகசியமாக, பொது வெளியில் அதிகம் தெரியாமலும் இருந்து வருகிறது. இருப்பினும், பல கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வாழ்க்கையில் ரகசியம் எதுவும் இல்லை என்று வெளிப்படையாக, காதலிகள் முதல் தனிப்பட்ட பிரச்சனைகள் வரை பகிர்ந்துள்ளனர். அந்த வரிசையில், ஒரு முறைக்கு மேல் திருமணம் செய்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியல் இங்கே.
அருண் லால் : முன்னாள் இந்திய கிரிக்கெட்டரான அருண் லால் ரீனா என்ற பெண்ணை முதலில் திருமணம் செய்த அருண் லால், இருவரின் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்தும் பெற்று விட்டனர். உடல் நலம் பாதிப்பு காரணமாக அருண் லால் தனது விவாகரத்தான முதல் மனைவியுடன் வசித்து வந்தார். இருப்பினும் புள் புள் என்ற மற்றொரு பெண்ணை திருமணம் செய்ததாக செய்தி வெளியாகி இருக்கிறது. அருண் மற்றும் புள்புல்லின் திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் கொல்கத்தாவில் நடைபெற்றது.
வினோத் காம்ப்ளி :இளம் வயதில் இருந்தே சச்சின் டெண்டுல்கரின் நண்பராக இருக்கும் வினோத் காம்ப்ளியின் திருமணம் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலுமே பரபரப்பை ஏற்படுத்தியது என்று கூறலாம். ஒரு ஹோட்டலில் ரிசப்ஷனிஸ்டாக வேலை பார்த்த நோயெல்லா என்ற பெண்ணைத் 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்தது மிகப்பெரிய கவர் ஸ்டோரியாக அனைத்து பத்திரிக்கைகளும் எழுதின. ஆனால் சில ஆண்டுகள் மட்டுமே நீடித்த இந்த காதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. வினோத் காம்ப்ளி அதன் பிறகு, மாடலான ஆண்ட்ரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதற்கு இவர் கிருத்துவ மதத்திற்கு மாறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜவகல் ஸ்ரீநாத் : ஜவகல் ஸ்ரீநாத் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது பலரும் அறிந்திராத ஒரு தகவலாகும். முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜவகல் ஸ்ரீநாத், ஜோஸ்னா என்பவரை 1999 ஆம் ஆண்டு வேர்ல்ட் கப் முடிந்த உடனேயே திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு சில ஆண்டுகளிலேயே இவர்கள் விவாகரத்து பெற்றனர். அதற்கு பிறகு மாதவி பத்திரவள்ளி என்ற பத்திரிக்கையாளரை ஸ்ரீநாத் திருமணம் செய்துள்ளார்.
தினேஷ் கார்த்திக் : விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக்கின் முதல் திருமணம் கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது இளம் வயது தோழியான நிகிதாவை திருமணம் செய்தார் தினேஷ். ஆனால், நிகிதா, சக கிரிக்கெட் வீரரான முரளி விஜயுடன் காதல் கொண்டு, உறவில் இருந்தது தெரிந்து விவாகரத்து செய்தார். பின்னர், இந்திய ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகாவை திருமணம் செய்துள்ளார்.