அதிரடி மூலம் மெக்கல்லம் மட்டும்தான் பயமுறுத்துவாரா? நாங்கதான் இதை முதல்ல ஆரம்பிச்சு வச்சோம் என்று சொல்வதற்கு ஏற்ப மெக்கல்லத்துக்கே ஷாக் கொடுத்த அதிரடியைக் காட்டினார் ரிஷப் பண்ட். 111 பந்துகளி 19 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் பண்ட் 146 ரன்கள் எடுத்து ஜோ ரூட்டின் சொத்தைப் பந்தில் ஆட்டமிழந்தார். பவுண்டரிகளில் மட்டுமே 100 ரன்கள். இங்கிலாந்து பவுலிங்குக்கு இவ்வளவுதான் அவர் மதிப்பு.
ஆண்டர்சனை ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்வீப் என்று எல்லாம் ஆடிவிட்டார், பாட்ஸ் பந்துகளுக்கு பேக்ஃபுட் பஞ்ச்களை ஒதுக்கி வைத்திருந்தார், ஜாக் லீச்சுக்கு ஒரு கை சிக்ஸ் உட்பட டவுன் த ட்ராக் ஷாட்களை ஒதுக்கி வைத்தார், பென் ஸ்டோக்ஸின் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு கட், புல், ஹூக் ஷாட்களை ஒதுக்கி வைத்தார். 89 பந்துகளில் சதம் கண்டு இங்கிலாந்தில் அதிவேக சதம் கண்ட 2வது வீரர் ஆனார். 111 பந்துகளில் 146 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனதால் எட்ஜ்பாஸ்டனில் கில்கிறிஸ்டின் 152 ரன் அதிக ஸ்கோரை முறியடிக்க முடியவில்லை.
சில சுவையான புள்ளி விவரங்கள்: 222 ரன்கள் பண்ட்-ஜடேஜா கூட்டணி ரன்கள் 6வது விக்கெட்டுக்கு இணைந்த அதிகபட்ச கூட்டணியாகும். 58/5 என்ற நிலையிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 222 ரன்கள் கூட்டனியை சச்சின் டெண்டுல்கரும், முகமது அசாருதீனும் தென் ஆப்பிரிக்காவில் எடுத்தனர். இரண்டு 6வது விக்கெட் பார்ட்னர்ஷிப்புமே அயல்நாட்டில் வந்ததே. அதிக 6வது விக்கெட் கூட்டணியில் லஷ்மண், அஜய் ராத்ரா வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 217, அஸ்வின், சஹா 213 வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, தோனி, இர்பான் பதான் 210 ரன்கள் பாகிஸ்தானுக்கு எதிராக பைசலாபாத்தில்